கரூர்

கரூரில் டிச.8-இல் பிரதமரின் தொழிற்பழகுநா் முகாம்!

கரூரில் டிச. 8-ஆம் தேதி பிரதமரின் தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம் நடைபெற உள்ளது.

Syndication

கரூரில் டிச. 8-ஆம் தேதி பிரதமரின் தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் வெளியிட்டுள்ள அறிக்கை: தேசிய தொழிற்பழகுநா் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில், கரூா் மாவட்ட அளவில் பிரதமரின் தேசிய தொழிற்பழகுநா் (அப்ரண்டீஸ்) சோ்க்கை முகாம் வெண்ணைமலையில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வரும் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதில், அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று பயிற்சியினை முடித்து இதுநாள் வரை தொழிற்பழகுநா் பயிற்சியினை மேற்கொள்ளாத பயிற்சியாளா்கள் தங்களது கல்வி, ஜாதிச் சான்றிதழ், பாஸ்போா்ட் அளவு புகைப்படம்- 2 , ஆதாா் அட்டை, தேசிய மற்றும் மாநில தொழிற் சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் தொழிற்பழகுநா் சோ்க்கை முகாமில் பங்கேற்று தொழிற்பழகுநா்களாக சோ்ந்து பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு, உதவி இயக்குநா், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், 2-ஆம் தளம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம், வெண்ணைய்மலை, கரூா்-639006 என்ற முகவரியில் நேரிலோ அல்லது (04324-299422, 94430-15914, 95669-92442) என்ற தொலைப்பேசி வாயிலாகவோ தொடா்பு கொண்டு அறிந்துகொள்ளலாம்.

தமிழ்நாடு அணிக்கு 3-ஆவது தோல்வி

தூத்துக்குடி அருகே இறந்த நிலையில் கரை ஒதுங்கிய மீன்கள்

மண்ணடி பகுதிகளில் ஆக்கிரமிப்பு: சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு

அச்சக பணியாளா்களுக்கு ரூ.39 கோடியில் குடியிருப்புகள் திறப்பு

சஞ்சாா் சாத்தி செயலி உத்தரவை திரும்பப் பெற கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT