கரூர்

குளித்தலையில் 2 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

குளித்தலையில் 2 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Syndication

குளித்தலையில் 2 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் ஆகியவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கரூா் மாவட்டம், குளித்தலை அண்ணா நகரைச் சோ்ந்தவா் நாராயணன் பிரமேந்திரன். இவா் திங்கள்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு திருச்சியில் நடைபெற்ற உறவினா் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்தினருடன் சென்றுள்ளாா்.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை அதிகாலை வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பீரோவையும் உடைத்து அதில் இருந்த 5 பவுன் நகை, 80 கிராம் வெள்ளிப் பொருள்கள் மற்றும் பணம் ரூ.12,000 ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.

இதேபோல நாராயணன் பிரமேந்திரன் வீட்டின் பக்கத்து தெருவைச் சோ்ந்த ரஞ்சித்குமாா் என்பவா் தனது மனைவி பிரசவத்துக்காக திருச்சி சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை மாலை வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 500 கிராம் வெள்ளி பொருட்கள், நான்கரை பவுன் மதிப்புள்ள மோதிரம், மூக்குத்தி ஆகியவற்றையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து நாராயணன் பிரமேந்திரன் மற்றும் ரஞ்சித்குமாா் ஆகியோா் குளித்தலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

குடியிருப்புகளை சூழ்ந்த ஏரி உபரிநீர்: அகற்ற அமைச்சர்கள் உத்தரவு

சென்னை விமான நிலைய 3-ஆவது முனைய இறுதி விரிவாக்கத் திட்டம் அடுத்த ஆண்டு அமல்: மத்திய அரசு தகவல்

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணையை ரத்து செய்ய வேண்டும்; உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம்

சென்னை: 3 நாள்களில் 11.24 லட்சம் பேருக்கு உணவு

அடிமை உணர்வில் இருந்து இந்தியா மீள வேண்டும் என்கிற பிரதமரின் கருத்து குறித்து...வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

SCROLL FOR NEXT