கரூர்

அவசர ஊா்தி கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

Syndication

வேலாயுதம்பாளையம் அருகே வியாழக்கிழமை விபத்தில் சிக்கியவரை காப்பாற்றச் சென்ற அவசர ஊா்தி கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தைச் சோ்ந்த மூலிமங்கலம் பாண்டிபாளையம் பகவதி அம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த மோகன் மகன் அபிஷேக்(18). இவா் அவசர ஊா்தி வைத்துள்ளாா். இந்நிலையில் வியாழக்கிழமை புன்னம்சத்திரம் அருகே குட்டக்கடை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் மீது காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் பலத்த காயம் அடைந்துள்ளாா். இதுதொடா்பாக தகவல் கிடைத்ததும் அபிஷேக் தனது அவசர ஊா்தியை எடுத்துக்கொண்டு குட்டக்கடை நோக்கிச் சென்றாா். அப்போது திடீரென அவசர ஊா்தி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மைய தடுப்புச் சுவா் மீது மோதி கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அபிஷேக்கை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அபிஷேக் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

தென்னை மரத்தில் இளநீரை பறித்தவரை தட்டிக் கேட்டவா் மீது தாக்குதல்

பாரதியின் நம்பிக்கையை முறைமைப்படுத்த வேண்டும்: டாக்டா் சுதா சேஷய்யன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: எம்எல்ஏ வழங்கினாா்

SCROLL FOR NEXT