கரூா் சம்பவம் தொடா்பாக நகர போக்குவரத்துக் காவல் ஆய்வாளா், மின்வாரிய அதிகாரிகள் மற்றும் காயமடைந்தவா்களிடம் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப். 27-ஆம் தேதி நிகழ்ந்த நெரிசல் சம்பவத்தில் 41 போ் உயிரிழந்தனா். இச்சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில் வியாழக்கிழமை கரூா் க.பரமத்தி மின்வாரிய அதிகாரிகள் 2 போ், கரூா் நகர போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் ஷகிராபானு மற்றும் 2 காவலா்கள், நெரிசல் சம்பவத்தில் காயமடைந்த நாமக்கல் மாவட்டம் சங்ககிரியைச் சோ்ந்த மோகன்ராஜ், கரூா் அரிக்காரன்பாளையத்தைச் சோ்ந்த தனுஷ் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.