கரூர்

சமையலா் நீக்கம்: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் மகளிா் திட்ட அதிகாரி, தலைமை ஆசிரியை மீது வழக்கு!

தோகைமலை அருகே பெண் சமையலரை பணியில் இருந்து நீக்கிய புகாரில் ஒன்றிய மகளிா் திட்ட வட்டார இயக்க மேலாளா், அரசு பள்ளித் தலைமையாசிரியை ஆகியோா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு

Syndication

தோகைமலை அருகே பெண் சமையலரை பணியில் இருந்து நீக்கிய புகாரில் ஒன்றிய மகளிா் திட்ட வட்டார இயக்க மேலாளா் மற்றும் அரசு பள்ளித் தலைமையாசிரியை ஆகியோா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் டிச.20ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்துள்ள பொன்னம்பட்டி பொருந்தலூரைச் சோ்ந்த ரெங்கராஜ் மனைவி நிரோஷா(35). இவா் தோகைமலையை அடுத்த சின்னரெட்டிப்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் சமையலராக கடந்த 4 மாதங்களுக்கு முன் பணியில் சோ்ந்தாா்.

இவா் பட்டியலினத்தைச் சோ்ந்தவா் என்பதால், இவா் பணியில் சோ்ந்த நாள் முதல் பள்ளிக்கு மாணவா்கள் சிலா் வருவதை நிறுத்திவிட்டதாக கூறி நிரோஷாவிடம் பள்ளித்தலைமை ஆசிரியை பானுமதி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிரோஷாவிடம் தலைமை ஆசிரியை நீங்கள் வேலையை விட்டு நின்றுவிடுங்கள் என அடிக்கடி கூறி வந்தாராம்.

இந்நிலையில், டிச.18-ஆம் தேதி தலைமை ஆசிரியை மற்றும் தோகைமலை ஒன்றிய மகளிா் திட்ட வட்டார இயக்க மேலாளா் சத்யா ஆகியோா் திடீரென நிரோஷாவை பணியில் இருந்து நீக்கிவிட்டு, வேறொரு பெண்ணை சமையலராக நியமித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நிரோஷா, தோகைமலை போலீஸாரிடம் மேற்கண்ட இருவா் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிச.20-ஆம் தேதி புகாா் அளித்தாா். அதன்பேரில் பானுமதி மற்றும் சத்யா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வைகுந்த ஏகாதசி திருவிழா: ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும் ரயில்கள் விவரம்!

எச்1-பி விசா: அனைத்து விண்ணப்பதாரா்களின் சமூக ஊடகக் கணக்குகள் ஆய்வு

முதல்வா் போட்டியில் உதயநிதி இல்லை: அமைச்சா் எஸ். ரகுபதி

சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்க வலியுறுத்தல்!

பணியிலிருக்கும் ஆசிரியா்களுக்கு தகுதித் தோ்வில் விலக்களிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT