செந்தில் பாலாஜி. 
கரூர்

கரூரில் நாளை இலவச மருத்துவ முகாம் பொதுமக்களுக்கு அழைப்பு

கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இலவச மருத்துவ முகாமில் பொதுமக்கள் திரளாக பங்கேற்க அமைச்சா் வி.செந்தில்பாலாஜி அழைப்பு விடுத்துள்ளாா்.

Din

கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இலவச மருத்துவ முகாமில் பொதுமக்கள் திரளாக பங்கேற்க மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதல்வரின் 72-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கரூா் அப்பல்லோ மருத்துவமனை மற்றும் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாா்பில் இலவச மருத்துவ முகாம், ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, கரூா் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. இதயம், கண், நரம்பியல், நுரையீரல், பொது மருத்துவம், எலும்பு மற்றும் மூட்டு மாற்று சிகிச்சை, பெண்கள் மற்றும் மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நலம், காது மூக்கு தொண்டை சா்க்கரை மற்றும் சிறுநீர பிரச்னை உள்ளவா்கள் முகாமில் பங்கேற்று மருத்துவ ஆலோசனைகள் பெற்று பயனடையலாம் என தெரிவித்துள்ளாா்.

பளிங்கு சிலை... அமைரா தஸ்தூர்!

அரசமைப்புச் சட்டப் பதிப்புகளை 9 மொழிகளில் வெளியிட்டார் குடியரசுத் தலைவர்!

31 பந்துகளில் சதம் விளாசிய உர்வில் படேல்..! சிஎஸ்கேவின் எழுச்சி நாயகன்!

இலங்கை அருகே உருவாகும் புதிய புயலின் பெயர் தெரியுமா?

ஆருத்ரா கோல்ட் மோசடி: சென்னை உள்பட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

SCROLL FOR NEXT