கரூா் ஒன்றியம் நன்னியூா் கிராமத்தில் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேளாண்மைத்துறையின் மூலம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாமில் கரூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் காதா்மொகைதீன் கலந்துகொண்டு ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் குறித்தும், வேளாண்மை அறிவியல் நிலையத்தின் கவியரசு ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றிய தொழில்நுட்பம் குறித்தும், கால்நடை மருத்துவா் மணிகண்டன், கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கமாக கூறினா்.
உதவி தொழில்நுட்ப மேலாளா் சுரேஷ் உழவன் செயலி பற்றியும் விவசாய நில உடைமை ஆவணங்கள் பதிவு செய்யும் முறைகள் பற்றியும் எடுத்துக் கூறினாா். இறுதியாக வேளாண்மை உதவி அலுவலா் செந்தில்வடிவு நன்றி கூறினாா். இதில் விவசாயிகள் திரளாக பங்கேற்றனா்.