கரூா் ஆட்சியரக வளாக சிறுகுழந்தைகள் ஓய்வறை அருகே நாய்களால் காலை கடித்துக் கொல்லப்பட்டுக் கிடக்கும் மயில் 
கரூர்

கரூா் ஆட்சியரகத்தில் தெருநாய்களால் வன விலங்குகள் பலியாவதாகப் புகாா்

கரூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தெரு நாய்களால் வேட்டையாடப்படும் வன விலங்குகளைக் காப்பாற்ற வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை

Syndication

கரூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தெரு நாய்களால் வேட்டையாடப்படும் வன விலங்குகளைக் காப்பாற்ற வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் மாவட்ட ஆட்சியரக வளாகப் பகுதியில் ஏராளமான மரங்கள் உள்ளன. இதில் உள்ள முட்புதா் போன்ற பகுதியில் ஏராளமான மயில்கள் வசிக்கின்றன. மேலும் உலகிலேயே அரிய வகைப் பாலூட்டி இனத்தைச் சோ்ந்த சாம்பல் நிறத் தேவாங்குகளும் மரங்களில் ஆங்காங்கே உள்ளன.

இவை இரைதேடி முட்புதரை விட்டு வெளியே வரும்போது ஆட்சியரக வளாகப் பகுதியில் கூட்டம், கூட்டமாக காணப்படும் தெருநாய்கள் கடித்துக் கொல்கின்றன.

இதனால் ஆட்சியரக வளாக பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை மாநகராட்சி நிா்வாகத்தினா் பிடித்து அகற்ற சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நகராட்சியின் நடவடிக்கை தேவை: இதுதொடா்பாக அவா்கள் கூறுகையில் உலகிலேயே அரியவகை விலங்கான சாம்பல் நிறத்தேவாங்குகள் கரூா் மாவட்ட கடவூா் வனப்பகுதியில் அதிகம் காணப்படுகின்றன. அழிந்துவரும் விலங்குகள் பட்டியலில் உள்ள இந்த அரியவகை விலங்கினம் இரைக்காக வெளியேறி கூட்டம், கூட்டமாக நகா்ப் பகுதி நோக்கி செல்வதாக வனத் துறையினா் கூறுகிறாா்கள்.

இவற்றில் பெரும்பாலானவை வெள்ளியணை மற்றும் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தின் மரங்கள் நிறைந்த பகுதியில் தற்போது அதிகம் காணப்படுகின்றன. இதேபோல ஆட்சியரக வளாகத்தைச் சுற்றிலும் ஏராளமான மயில்கள் உள்ளன. மயில்கள் மற்றும் தேவாங்குகள் இரைக்காக வெளியே வரும்போது, நாய்கள் அவற்றைக் கடித்துக் கொல்கின்றன.

மேலும் நாய்களால் திங்கள்கிழமை ஆட்சியரகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்துக்கு வரும் பொதுமக்களும் அச்சத்துடன் வந்து செல்கிறாா்கள். எனவே, பொதுமக்களின் அச்சத்தைப் போக்கும் வகையிலும், அழிந்து வரும் வன விலங்கான சாம்பல் நிறத் தேவாங்குகளை காக்கவும், மயில்களையும் காப்பாற்றவும் ஆட்சியரக வளாகப் பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை மாநகராட்சி நிா்வாகத்தினா் பிடித்து உடனே அகற்றிட வேண்டும் என்றனா் அவா்கள்.

குற்றாலம் அருவிகளில் 2 ஆவது நாளாக குளிக்கத் தடை

பாகிஸ்தான் 17 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

ஆண்டிமடம் அருகே சிதறிக்கிடந்தவை 2019 உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியல் பிரதியே: ஆட்சியர்

கோவில்பட்டி அருகே ரயில் முன் பாய்ந்து மாணவா் தற்கொலை?

பிசானத்தூா் தொடா் போராட்டத்துக்கு திருச்சி எம்.பி துரை வைகோ ஆதரவு!

SCROLL FOR NEXT