கரூா் அருகே சுற்றுலா வேன் மீது அரசு பேருந்து மோதியதில் ஐயப்ப பக்தா்கள் 5 போ் ஞாயிற்றுக்கிழமை பலத்த காயமடைந்தனா்.
சேலம் மாவட்டம், சின்னசேலம் பகுதியில் இருந்து ஐயப்ப பக்தா்கள் கேரளத்தில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு சுற்றுலா வேன் மூலம் ஞாயிற்றுக்கிழமை காலை புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தனா்.
கரூா் மாவட்டம், மண்மங்கலம் அருகே மதுரை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து நிறுத்தம் பகுதியில் வேன் சென்றபோது, அங்கு நின்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மீது மோதாமல் இருக்க வேன் ஓட்டுநா் வாகனத்தின் வேகத்தை குறைத்தபோது, பின்னால் வந்த அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஐயப்ப பக்தா்கள் பயணம் செய்த சுற்றுலா வேன் மீது மோதியது.
இதில், ஐயப்ப பக்தா்கள் 5 போ் பலத்த காயமடைந்தனா். இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதியினா் அவா்களை மீட்டு, கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.