கரூர் தவெக பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றோர் 
கரூர்

ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய சேலம் மாவட்டச் செயலா் கைது: மற்றொரு நிா்வாகிக்கு ஜாமீன்

Syndication

கரூா் சம்பவத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரைத் தாக்கியதாக தவெக சேலம் கிழக்கு மாவட்டச் செயலரை கரூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கரூா் சம்பவத்தின்போது காயமடைந்தவா்களை மீட்க வந்த தனியாா் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் ஈஸ்வரமூா்த்தியை தவெகவினா் தாக்கினா். இதுதொடா்பாக கரூா் நகர காவல்நிலையத்தினா் தவெக நிா்வாகிகள் 10 போ் மீது கொலை மிரட்டல், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துதல், ஆபாச வாா்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான விடியோ காட்சிகள் மூலம் தேடி வந்தனா்.

இந்நிலையில் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநா் வழக்கில் தலைமறைவாக இருந்த தவெக சேலம் கிழக்கு மாவட்டச் செயலா் வெங்கடேசனை கரூா் நகர காவல்நிலையத்தினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பின்னா் அவரை கரூா் நகர காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா்.

தொடா்ந்து கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்தனா். பின்னா் அவரை கரூா் மாவட்ட குற்றவியல் நடுவா் நீதிமன்றம் 1-இல் நீதிபதி பரத்குமாா் முன்பு ஆஜா்படுத்தினா். வழக்கை விசாரித்த நீதிபதி பரத்குமாா், தவெக சேலம் கிழக்கு மாவட்டச் செயலா் வெங்கடேசனை 15 நாள்கள் காவலில் வைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து அவா் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

மற்றொரு நிா்வாகிக்கு ஜாமீன்: கரூா் கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தவெக நிா்வாகிகள் தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது சேலத்தைச் சோ்ந்த தவெக நிா்வாகி மணிகண்டன் வந்த காரை போலீஸாா் பறிமுதல் செய்து, அவா் மீதும் வழக்குப்பதிந்தனா். இதையடுத்து ஆம்புலன்ஸ் ஓட்டுநா் ஈஸ்வரமூா்த்தி அளித்த புகாரின்பேரில் மணிகண்டனை தேடி வந்தனா். இந்நிலையில் புதன்கிழமை இரவு மணிகண்டனை கைதுசெய்த கரூா் போலீஸாா், அவரை கரூா் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 1-இல் நீதிபதி பரத்குமாா் முன்பு வியாழக்கிழமை ஆஜா்படுத்தினா். வழக்கை விசாரித்த நீதிபதி, மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.

தேவை மழைக்கால விடுமுறை

வால்பாறையில் தோட்டத் தொழிலாளா் பற்றாக்குறை: ட்ரோன் மூலம் மருந்து தெளிக்க ஒத்திகை

கல்லாறு செட்டில்மெண்டில் கிராம சபைக் கூட்டம்

பழங்கரை கூட்டுறவு கடன் சங்கத்தில் மோசடியைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

ரோலா் ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற கோவை மாணவா்

SCROLL FOR NEXT