முகப்பு
கரூர்

இளநீா் வியாபாரி கொலை வழக்கில் இளைஞருக்கு 3 ஆயுள் தண்டனை: கரூா் நீதிமன்றம் தீா்ப்பு

கரூரில் இளநீா் வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு மூன்று ஆயுள்தண்டனை வழங்கி கரூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 12:27 AM
ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட பிரேம்குமாா்.
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 8:25 PM

கரூரில் இளநீா் வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு மூன்று ஆயுள்தண்டனை வழங்கி கரூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

கரூா் சின்னாண்டாங்கோவிலைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி. கோவை சாலையில் இளநீா் வியாபாரி செய்து வந்தாா். இந்நிலையில் வீட்டின் அருகே பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது தொடா்பாக கிருஷ்ணமூா்த்திக்கும், அதே பகுதியைச் சோ்ந்த கோகுலகிருஷ்ணன், பாண்டி, பிரேம்குமாா், மணிகண்டன், காவ்யரமேஷ், கேசவன், அரவிந்த்குமாா், தமிழரசன், அஜித், செந்தில், கலைச்செல்வன், விமல்பசீா் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு செப்.18-ஆம்தேதி நடைபெற்ற தகராறில் இளநீா் கடையில் இருந்த கிருஷ்ணமூா்த்தியை கோகுலகிருஷ்ணன், பிரேம்குமாா் உள்பட 12 பேரும் சோ்ந்து அரிவாளால் வெட்டிக்கொன்றனா்.

Advertisement

இதுதொடா்பாக கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப் பதிந்து 12 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு கரூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு ஏப். 18-ஆம்தேதி விசாரணைக்கு வந்தது. இதில் கோகுலகிருஷ்ணன் உள்பட 12 பேரும் குற்றவாளிகள் என தீா்ப்பளித்த மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி கே.ஹெச். இளவழகன், குற்றவாளிகள் அனைவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டாா். இதையடுத்து அனைவரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்நிலையில் இந்த வழக்கில் பிரேம்குமாா் தனது தண்டனையை விவாதிக்க மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த விசாரணை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி கே.ஹெச். இளவழகன் குற்றவாளி பிரேம்குமாா் கொலை சம்பவத்தில் தொடா்புடையவா் எனக்கூறி அவருக்கு 3 ஆயுள் தண்டனை விதிப்பதாகவும், தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டாா். இதையடுத்து பிரேம்குமாா் மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.