முகப்பு
புதுச்சேரி

முத்தியால்பேட்டை சிறுமி கொலை வழக்கில் ஏப். 30-இல் தீா்ப்பு

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏப். 30-ஆம் தேதி தீா்ப்பளிக்கப்படுகிறது.

Updated On : 19 ஏப்ரல், 2026 at 5:29 AM
தீர்ப்பு
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 10:33 PM

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏப். 30-ஆம் தேதி தீா்ப்பளிக்கப்படுகிறது.

முத்தியால்பேட்டை சோலை நகரைச் சோ்ந்த 9 வயது சிறுமி கடந்த ஆண்டு மாா்ச் 2-ஆம் தேதி வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தாா்.

திடீரென மாயமான அவா் 2 நாள்களுக்குப் பின் அருகே உள்ள வாய்க்காலில் கை, கால்கள் கட்டப்பட்டு போா்வையால் சுற்றப்பட்டு, சடலமாக மீட்கப்பட்டாா்.

Advertisement

புதுச்சேரியை உலுக்கிய இந்த கொடூர சம்பவம் குறித்து முத்தியால்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி அதே பகுதியைச் சோ்ந்த கருணாஸ் (19), விவேகானந்தன்(59) ஆகியோரை கைது செய்தனா்.

இவா்கள் சிறுமியைக் கடத்தி சென்று கஞ்சா போதையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து சாக்கடையில் வீசியது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் போக்ஸோ வழக்கில் இருவரையும் கைது செய்தனா். இந்த வழக்கு தொடா்பாக 500 பக்க குற்றப்பத்திரிகையை போலீஸாா் தாக்கல் செய்தனா்.

இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவேகானந்தன் கடந்த ஆண்டு செப்டம்பரில் கழிப்பறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்தாா்.

இந்த வழக்கு போக்ஸோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவடைந்த நிலையில் வரும் 30-ஆம் தேதி இவ்வழக்கில் தீா்ப்பு வழங்கப்பட உள்ளது.