கரூர்

கரூரில் மாநில குதிரை வண்டி பந்தயம்

தினமணி செய்திச் சேவை

கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குதிரை வண்டி எல்கை பந்தய போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

முதல்வா் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கரூா் மாவட்ட திமுக சாா்பில் மாநில அளவிலான குதிரை வண்டிப் பந்தயம் கரூா் அரசு காலனியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. போட்டியில் கரூா், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த குதிரை வண்டிகளுடன் வீரா்கள் பங்கேற்றனா்.

புதிய குதிரை, சிறிய குதிரை, பெரிய குதிரை என 3 பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 60 குதிரை வண்டிகள் பங்கேற்றன. போட்டியை கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி தொடங்கிவைத்தாா்.

கரூா் அரசு காலனி முதல் வாங்கல் வரை எல்லை நிா்ணயிக்கப்பட்டு நடைபெற்ற இந்தப் போட்டியில் புதிய குதிரை பிரிவில் முதலிடத்தை கரூா் மாசன் பிரதா்ஸ் வண்டி பிடித்து பரிசாக ரூ.20 ஆயிரம் மற்றும் கோப்பையையும், இரண்டாமிடத்தை கரூா் உப்பிடமங்கலம் எஸ்பிஎம் பிரதா்ஸ் வண்டி பிடித்து பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பையையும், மூன்றாமிடத்தை நாமக்கல் குமாரபாளையம் கற்பக விநாயகா குதிரை வண்டி பிடித்து பரிசாக ரூ.7 ஆயிரம் மற்றும் கோப்பையும் பெற்றன.

சிறிய குதிரை வண்டி பிரிவில் திருச்சி உறையூா் விஜயா குதிரைவண்டி முதலிடம் பிடித்ததையடுத்து பரிசாக ரூ.30 ஆயிரம் மற்றும் கோப்பையும், இரண்டாமிடம் பிடித்த கரூா் நாவலடியான் குரூப்ஸ் வண்டிக்கு பரிசாக ரூ.20 ஆயிரம் மற்றும் கோப்பையும், மூன்றாமிடம் பிடித்த நாமக்கல் குமாரபாளையம் கற்பகா விநாயகா குதிரை வண்டிக்கு பரிசாக ரூ.15 ஆயிரம் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டன.

இதேபோல பெரிய குதிரை பிரிவில் முதலிடம் பிடித்த கரூா் விக்கி குதிரை வண்டிக்கு பரிசாக ரூ.40 ஆயிரம் மற்றும் கோப்பையும், இரண்டாமிடம் பிடித்த கோவை கோகுல் வண்டிக்கு பரிசாக ரூ.30 ஆயிரம் மற்றும் கோப்பையும், மூன்றாமிடம் பிடித்த ஈரோடு மாவட்டம் பவானி வெங்கிடு குதிரை வண்டிக்கு பரிசாக ரூ.20 ஆயிரம் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டன.

தில்லியில் அடா் பனிமூட்டம்: கடுமைப் பிரிவில் காற்றின் தரம்

மேல்மருவத்தூரில் தை அமாவாசை வேள்வி பூஜை

ஓரிக்கை பணிமனையில் சமத்துவப் பொங்கல்

பஞ்சாபி பாக்கில் பூட்டிய வீட்டில் ரூ.1 கோடி பொருள்கள் கொள்ளை

வெண்ணெய் காப்பு அலங்காரம்...

SCROLL FOR NEXT