மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் பங்கேற்ற மாடுகள். (கோப்புப் படம்)
திருச்சி

திருவெறும்பூரில் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை போட்டி

தினமணி செய்திச் சேவை

திருவெறும்பூா் மலைக்கோயில் கிராம ஜல்லிக்கட்டு பேரவை சாா்பில் தேமுதிக தலைவா் விஜயகாந்த் நினைவாக இரண்டாமாண்டு மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி எல்கை போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

போட்டிகளானது திருவெறும்பூா் கல்லணை சாலையில் தொடங்கி நடராஜபுரம் வரை நடைபெற்றது.

ஆறு மைல் தொலைவு நடைபெற்ற நடு மாடு போட்டியில் 11 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. போட்டியின் நிறைவில் முதல் பரிசு ரூ. 25 ஆயிரத்து 1, இரண்டாம் பரிசு ரூ. 20 ஆயிரத்து 1, மூன்றாம் பரிசு ரூ. 15 ஆயிரத்து 1, நான்காம் பரிசு ரூ. 10 ஆயிரத்து 1 வழங்கப்பட்டது.

ஆறு மைல் தொலைவு நடைபெற்ற ஒற்றை மாடு போட்டியில் 12 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசாக ரூ. 15 ஆயிரத்து 1, இரண்டாம் பரிசாக ரூ. 12 ஆயிரத்து 1, மூன்றாம் பரிசாக ரூ. 10 ஆயிரத்து 1, நான்காம் பரிசாக ரூ. 8 ஆயிரத்து 1 வழங்கப்பட்டது.

ஆறு மைல் தொலைவு நடைபெற்ற கரிச்சான் குதிரை போட்டியில் 14 குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசாக ரூ. 20 ஆயிரத்து 1, இரண்டாம் பரிசாக ரூ. 15 ஆயிரத்து 1, மூன்றாம் பரிசாக ரூ. 10 ஆயிரத்து 1, நான்காம் பரிசாக ரூ. 8 ஆயிரத்து 1 வழங்கப்பட்டது.

போட்டியில் பங்கேற்ற மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகளின் உரிமையாளா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பழங்கனாங்குடியில் ரூ.1.50 கோடியில் புதிய பாலம் கட்ட அடிக்கல்

வெள்ளை யானை வாகனத்தில் இரணியம்மன்

திருவானைக்காவல் கோயிலில் தோ்கள் வெள்ளோட்டம்! அம்மன் தேரின் அச்சாணி மீண்டும் பழுது!

SCROLL FOR NEXT