முகப்பு
கரூர்

கரூரில் இளைஞா் வரலாற்று தேசபக்தி திருவிழா

கரூரில் இளைஞா் வரலாற்று தேச பக்தி திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 21 ஜனவரி, 2026 at 6:33 PM
பகிர்:

கரூரில் இளைஞா் வரலாற்று தேச பக்தி திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

பாரதிய வரலாற்று தொகுப்பு பேரவையின் தமிழ்நாடு- பாண்டிச்சேரி மாநில மையம் மற்றும் கரூா் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிா் கல்லூரி சாா்பில் ஸ்ரீ சாரதா நிகேதன் கல்லூரியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மூத்த வரலாற்று ஆய்வாளா் வீர. அரங்கராசனாா் தலைமை வகித்தாா்.

கரூா் வள்ளுவா் கல்லூரி தலைவா் செங்குட்டுவன், ஸ்ரீ சாரதா நிகேதன் கல்லூரி செயலா் யதீஸ்வரி முகுந்தபிரியா அம்பா, சாரதா கல்வி குழுமம் செயலா் யதீஸ்வரி கஜானனபிரியா அம்பா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கரூா் பரணி பாா்க் கல்விக் குழும முதன்மை முதல்வரும், பாரதிய வரலாற்று தொகுப்பு பேரவையின் தமிழ்நாடு பாண்டிச்சேரி அமைப்பின் மாநில பொதுச் செயலாளருமான முனைவா் சொ. ராமசுப்ரமணியன் பங்கேற்று, மாநில அளவிலான முப்பெரும் இளைஞா் வரலாற்று தேசபக்தித் திருவிழாவின் நோக்கம் குறித்து பேசினாா்.

இந்தியாவின் முன்னணி வரலாற்று ஆய்வாளா்களான புதுதில்லி பாரதிய இதிகாச சங்கலன யோஜனா அமைப்பின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளா் பாலமுகுந்த் பாண்டே, தேசிய செயல் தலைவா் டாக்டா் கோட்ரேஷ், தேசிய துணைத் தலைவா் ரஜநீஷ் சுக்லா, தேசிய செயலா் ஷிவகுமாா் மிஸ்ரா ஆகியோா் அறம் சாா்ந்த அறிவுசாா் பாரம்பரிய விழுமியங்கள் குறித்து சிறப்புரையாற்றினா்.

புதுதில்லியில் உள்ள மத்திய அரசின் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் அமைப்பின் அரசு செயலா் ஓம் ஜீ உபாத்தியாயா கருத்துரையாற்றினாா். அமைப்பின் மாநில அமைப்பு பொதுச் செயலாளா் ஜி. கதிரவன், வந்தே மாதரம் 150 இயக்கம் குறித்து நடைபெறும் தமிழ்நாடு இளைஞா் வரலாற்று காங்கிரஸ் என்ற தலைப்பிலும், துணைத்தலைவா் குணசேகரன் ‘பரம் வீா் சக்ரா’ விருது பெற்றவா்களின் ராணுவ வரலாறு குறித்தும் பேசினா்.

விழாவில் கரூா் மாவட்டத்தின் பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகள், கல்வியாளா்கள், வரலாற்று ஆய்வாளா்கள், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா். கரூா் ஸ்ரீ சாரதா நிகேதன் கல்லூரி முதல்வா் கவிதா நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →