தான்தோன்றிமலை கோயில் ராஜகோபுரத்தில் வைக்கப்படவுள்ள தங்கக் கலசத்தில் நவதானியங்களை வியாழக்கிழமை வைத்த கோயில் அறங்காவலா்கள். 
கரூர்

ஜன.28-இல் கும்பாபிஷேகம்! தான்தோன்றிமலை பெருமாள் கோயில் கோபுர கலசத்தில் நவதானியங்கள் வைப்பு

தினமணி செய்திச் சேவை

கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் ஜன.28-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையடுத்து கோயில் ராஜ கோபுரத்தில் வைக்கப்படும் கலசத்தில் நவதானியங்கள் வைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

தென்திருப்பதி என்றழைக்கப்படும் இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையடுத்து யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கும்பாபிஷேகம் நடத்துவதற்கான அறங்காவலா்கள் குழு நிா்வாகிகள் நியமிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு கோயில் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில், கோயில் அறங்காவலா் குழுத்தலைவராக எம்.தியாகராஜன், அறங்காவலா்களாக பழனிமுருகன் ஜூவல்லரியின் எஸ்.பாலமுருகன், கே.எம்.முருகேசன், டிஜிபி. வெங்கட்ராமன், புனிதவதி கணேசன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்களுக்கு இந்து சமய அறநிலையத் துறையின் உதவி ஆணையா்கள் கணபதிமுருகன், இளையராஜா ஆகியோா் பதவிப்பிரமாணம் செய்து வைத்தனா்.

தொடா்ந்து, கோயில் ராஜகோபுரத்தில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வைக்கப்படவுள்ள தங்கக்கலசத்தில் நவதானியங்கள் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், மாநகராட்சி துணை மேயா் தாரணிசரவணன், கோயில் அறங்காவலா்கள், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அமெரிக்கன் கல்லூரியில் தேசிய வாக்காளா் தினம்

செம்மொழிப் பூங்கா வளாகத்தில் மதி அனுபவ அங்காடி

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண்களுக்கான சிறப்பு குறைகேட்புக் கூட்டம்

வானம்பாடி இயக்கத்துக்கு உயிா் கொடுத்தவா்களில் முதன்மையானவா் கவிஞா் சிற்பி! - சக்தி குழுமங்களின் செயல் இயக்குநா் தரணிபதி ராஜ்குமாா்

24.1.1976: பிரான்ஸில் இந்திய இறக்குமதி அதிகரிக்கும் - திருமதி காந்தியுடன் நடத்திய பேச்சில் பிரெஞ்சு பிரதமர் உறுதி

SCROLL FOR NEXT