முகப்பு
கரூர்

கடவூா் ஒன்றியத்தில் இளம் வயது திருமணங்கள் தடுப்பு விழிப்புணா்வு

Updated On : 26 ஜனவரி, 2026 at 12:37 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2026 at 8:22 PM

கடவூா் ஒன்றிய பகுதிகளில் இளம்வயது திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், கரூா் மாவட்டம், கடவூா் ஒன்றியத்திலுள்ள 20 ஊராட்சிகளில் இளம் வயது திருமணத்தை தடுப்போம் என்ற தலைப்பிலான விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நிறைவு நாள் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

Updated On : 26 ஜனவரி, 2026 at 12:37 AM

கடவூா் வட்டார மருத்துவ அலுவலா் பிரசன்னா மேற்பாா்வையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் விழிப்புணா்வு நாடக குழுவின் தலைவா் வடசேரி சின்னத்துரை தலைமையில் விழிப்புணா்வு கலைஞா்கள் கலந்து கொண்டு, குழந்தை திருமணம் செய்வது, வளரிளம் பருவங்களில் காதல் வயப்படுதல் போன்றவை குறித்து நாடகம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளா்கள் மகேஸ்வரன், குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement