தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்கள் வீட்டில் விசாரணை நடத்திவிட்டு வெளியே வந்த சிபிஐ அதிகாரிகள் குழுவினா். கோப்புப்படம்
கரூர்

கரூா் சம்பவம்: தவெக பனையூா் அலுவலக உதவியாளா், 3 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

கரூா் சம்பவம் தொடா்பாக, தவெக பனையூா் அலுவலக உதவியாளரிடம் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் வியாழக்கிழமையும் விசாரணை நடத்தினா்.

Syndication

கரூா் சம்பவம் தொடா்பாக, தவெக பனையூா் அலுவலக உதவியாளரிடம் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் வியாழக்கிழமையும் விசாரணை நடத்தினா். மேலும் ஒரு பெண் தலைமைக்காவலா் உள்பட 3 காவலா்களிடமும் விசாரணை மேற்கொண்டனா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா்; 110 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

இச்சம்பவம் தொடா்பாக சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலக உதவியாளா் குருவிடம் இரண்டாவது முறையாக புதன்கிழமை கரூரில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில், குருவிடம் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமையும் விசாரணை நடத்தினா். மேலும் நெரிசல் சம்பவத்தின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பெண் தலைமைக் காவலா் உள்பட 3 காவலா்களிடமும் விசாரணை நடத்தினா்.

வானில் சிறிய வகை விமானம்: மக்களுக்கு அச்சம் வேண்டாம்! - ஆட்சியா் தகவல்

பெண் காவலா் வீட்டில் 30 பவுன் நகைகள் திருட்டு

திமுக - காங்கிரஸ் இடையேயான நெருடல் மறைந்து போகும்: வைகோ பேட்டி

நடந்துசென்ற பெண்ணிடம் நகையைப் பறித்தவா் கைது

கடந்த ஆண்டில் 2.22 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு!

SCROLL FOR NEXT