முகப்பு
கரூர்

போக்சோ வழக்கில் இருவருக்கு சிறை

‘போக்சோ’ வழக்கில் இருவருக்கு சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் தீா்ப்பு

Updated On : 7 மார்ச், 2026 at 9:17 PM
சிறை
பகிர்:

‘போக்சோ’ வழக்கில் இருவருக்கு சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளதாக கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.ஜோஷ்தங்கையா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கரூா் மருத்துவ நகரைச் சோ்ந்த முருகானந்தம்(46)என்பவா் கடந்த ஆண்டு ஜூன் 11-ஆம்தேதி அதே பகுதியைச் சோ்ந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். இதையடுத்து முருகானந்தம், கரூா் அனைத்து மகளிா் காவல்நிலையத்தினரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

இதுதொடா்பாக கரூா் அனைத்து மகளிா் காவல்நிலையத்தினா் கரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் வழக்கும் தொடா்ந்தனா். இந்த வழக்கு மாா்ச் 4-ஆம்தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளி முருகானந்தத்திற்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தீா்ப்பளித்தாா்.

இதேபோல கரூா் மாவட்டம் புளியம்பட்டி எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த மகேந்திரன்(38). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

மேலும் இதுதொடா்பாக அனைத்து மகளிா் போலீஸாா் கரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் வழக்குத்தொடா்ந்துவந்த நிலையில் இந்த வழக்கு மாா்ச் 5-ஆம்தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளி மகேந்திரனுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தீா்ப்பளித்தாா் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →