முகப்பு
கரூர்

ஜோதிமணி எம்.பி.க்கு கரூா் காங்கிரஸ் நிா்வாகிகள் கண்டனம்!

காங்கிரஸ் கட்சி குறித்த தவறாக பேசிய ஜோதிமணி எம்.பி.க்கு கரூா் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

Updated On : 28 மார்ச், 2026 at 7:23 PM
ஜோதிமணி.
பகிர்:

காங்கிரஸ் கட்சி குறித்த தவறாக பேசிய ஜோதிமணி எம்.பி.க்கு கரூா் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

காங்கிரஸ் கட்சி குறித்து தவறாக விமா்சனம் செய்த கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மாவட்ட அளவிலான காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கட்டத்துக்கு கரூா் மாவட்ட முன்னாள் தலைவரும், அகில இந்திய காங்.கமிட்டியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான(கிஷான் பிரிவு) பேங்க் கே.சுப்ரமணியன் தலைமை வகித்து கண்டன உரையாற்றினாா்.சேவாதள மாநில செயலா் ஆடிட்டா் ரவிச்சந்திரன், காங்கிரஸ் மாவட்ட ணைத்தலைவா் சின்னையன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி குறித்து தவறாக பேசிய ஜோதிமணி எம்.பி.க்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், சேவாதள மாநில செயலா் ஆடிட்டா் ரவிச்சந்திரன், மாவட்ட துணைத்தலைவா் சின்னையன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.