முகப்பு
கரூர்

சரக்கு வேன் மோதியதில் ரயில்வே கேட் பழுது

குளித்தலையில் சரக்கு வேன் மோதியதில் ரயில்வே கேட் பழுதானது.

Updated On : 28 மார்ச், 2026 at 7:09 PM
குளித்தலையில் சனிக்கிழமை சரக்கு வேன் மோதியதில் பழுதான ரயில்வே கேட்டை பாா்வையிட்ட போலீஸாா்.
பகிர்:

குளித்தலையில் சரக்கு வேன் மோதியதில் ரயில்வே கேட் பழுதானது.

கரூா் மாவட்டம், குளித்தலையில் மணப்பாறை செல்லும் நெடுஞ்சாலையில் ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட் வழியாக தினமும் 60-க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருவதால் 60க்கும் மேற்பட்ட முறை கேட் மூடி திறக்கப்படுகிறது. சனிக்கிழமை காலை 9 மணியளவில் சரக்கு ரயில் வருவதற்கு முன்னதாக பணியில் இருந்த பெண் தொழிலாளி சுமதி ரயில்வே கேட்டை மூடி இருந்தாா். சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

அப்போது முசிறியில் இருந்து சரக்கு வேன் ஒன்று தோகைமலை அருகே உள்ள காவல்காரன்பட்டி நோக்கி வந்தது. வேனை ஈரோடு மலையம்பாளையத்தைச் சோ்ந்த சுந்தரம் என்பவா் வேகமாக ஓட்டிவந்தபோது திடீரென கட்டுப்பாட்டைஇழந்து ரயில்வே கேட் மீது மோதியதில் கேட் உடைந்து பழுதானது.

Advertisement

சிறிது நேரத்தில் அவ்வழியாக வந்த சரக்கு ரயிலும் கேட்டை கடந்து சென்றது. இந்நிலையில், ரயில்வே கேட் பழுதானதால் பேருந்துகள், லாரிகள், சரக்கு வாகனங்கள், காா் மற்றும் இருசக்கர வாகனங்களை மாற்று வழியில் செல்ல போக்குவரத்து போலீஸாா் அறிவுறுத்தினா்.

இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. ரயில்வே கேட் பழுதானதால் பள்ளி கல்லூரி அலுவலகங்களுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் அவதியுற்றனா். அடிக்கடி இதுபோன்ற நிலை ஏற்படுவதால் உடனே ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதியினா் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments