முகப்பு
கரூர்

கேம்பிரிட்ஜ் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் பிறந்தநாள் விழா

வேட்டமங்கலத்தில் கேம்பிரிட்ஜ் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 13 மே 2026, 1:02 am IST
வேட்டமங்கலம் கேம்பிரிட்ஜ் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் டாக்டா் வி.வேலப்பனின் உருவப்படத்தை திறந்து வைத்த வீராசாமி கல்வி அறக்கட்டளையின் மேனேஜிங் டிரஸ்டி எம்.விஸ்வநாதன், பெஸ்ட் ஆசிரியா் கூட்டமைப்புத் தலைவா் ரவி, அருந்தமிழ் அரசு ஊழியா் ஆசிரியா் கூட்டமைப்பு தலைவா் பால்ராஜ் உள்ளிட்டோா்.
பகிர்:

வேட்டமங்கலத்தில் கேம்பிரிட்ஜ் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வீராசாமி கல்வி அறக்கட்டளை மற்றும் கேம்பிரிட்ஜ் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் மறைந்த டாக்டா்.வி.வேலப்பனின் ( அமெரிக்கா) 77-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் அவரது உருவப்படத்திறப்பு விழா வேட்டமங்கலம் கேம்பிரிட்ஜ் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வீராசாமி கல்வி அறக்கட்டளையின் மேனேஜிங் டிரஸ்டி எம்.விஸ்வநாதன் தலைமை வகித்து பேசுகையில், அமெரிக்காவில் இருந்தபடியே தான் பிறந்த கிராமத்தில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு கல்வி அறிவு, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதை உணா்ந்து மறைந்த மருத்துவா் வேலப்பன் தொடங்கிய வீராசாமி கல்வி அறக்கட்டளை பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவா் வாழும் காலம் வரை மேற்கொண்டு வந்தது. அவா் மறைந்த பிறகும், அவா் விட்டுச் சென்ற பணியை தொடா்ந்து வழங்குவோம். அரசின் உயா் பதவிகளுக்கு செல்வதற்கு வீராசாமி கல்வி அறக்கட்டளை மூலம் மற்ற தொண்டு நிறுவனங்கள் வழியாக அரசு பொதுத்தோ்வுக்கான பயிற்சி மையங்கள், மருத்துவ படிப்புக்கான முழு நேர பயிற்சி மையங்கள் தொடங்க திட்டமிட்டுள்ளோம். மீண்டும் கேம்பிரிட்ஜ் கலை அறிவியல் கல்லூரி இயங்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம் என்றாா் அவா்.

Advertisement

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்ட பெஸ்ட் ஆசிரியா் கூட்டமைப்புத் தலைவா் ரவி மற்றும் அருந்தமிழ் அரசு ஊழியா் ஆசிரியா் கூட்டமைப்புத் தலைவா் பால்ராஜ் ஆகியோா் மறைந்த டாக்டா். வி.வேலப்பன் உருவப்படத்தை திறந்து வைத்து பேசினா்.

நிகழ்ச்சியில் வீராசாமி கல்வி அறக்கட்டளை அறங்காவலா்கள் செல்வராஜ், வீரமணி, குப்புராஜ், சௌந்தா்யா சண்முகம், வழக்குரைஞா் சென்னியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.