முகப்பு
கரூர்

கரூரில் பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து கரூரில் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 22 மே 2026, 5:09 am IST
கரூா் தலைமைத் தபால் நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினா்.
பகிர்:

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து கரூரில் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் தலைமைத் தபால் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாவட்டச் செயலா் ஜோதிபாசு தலைமை வகித்தாா். இந்திய கம்யூ. மாவட்டச் செயலா் கலாராணி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். பெட்ரோல், டீசல் விலையை உயா்த்திய மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூ. மற்றும் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.