பெரம்பலூர்

அனைத்து விடுதிகளுக்கும் இரவு காவலரை நியமிக்க வலியுறுத்தல்

DIN

விடுதி மாணவர்களின் நலன், பாதுகாப்பு கருதி அனைத்து விடுதிகளுக்கும் இரவு காவலரை நியமிக்க வேண்டுமென விடுதிப் பணியாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூரில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைப் பள்ளி, விடுதி பணியாளர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம், மாவட்டத் தலைவர் கா. பெரியசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சங்க நிறுவனர் ஆ. தங்கவேல் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத்தில் சமையலர்கள், காவலர்கள் பணிமூப்பு முதுநிலைப் பட்டியலை வெளியிட்டு, அவர்களுக்கு முறையே காவலர் மற்றும் அலுவலக உதவியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும். மாதம் ரூ. 3,000 ஊதியம் பெற்று வரும் சுமார் 1,300 விடுதிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களை காலமுறை ஊதிய பணியாளர்களாக உயர்த்த வேண்டும்.
பெரம்பலூரில் காலியாக உள்ள சமையலர், காவலர், துப்புரவு பணியாளர்களின் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். விடுதி பணியாளர்களின் கல்வி தகுதிக்கேற்ப பதவி உயர்வு வழங்க வேண்டும்.
விடுப்பு எடுக்க முடியாமல் ஒரு விடுதியில் ஒரே சமையலர் என்ற நிலையை மாற்றி, குறைந்தபட்சம் ஒரு விடுதிக்கு 2 சமையலர், 25 மாணவர்களுக்கு ஒரு சமையலர் என்ற விகிதாச்சார அடிப்படையில் சமையலர் பணி நியமனம் செய்ய வேண்டும். விடுதிகளில் பணியாற்றும் காவலர், ஏவலர், துப்புரவு பணியாளர்களுக்கு உணவு கட்டணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட பொருளாளர் ஏ. மூர்த்தி, நிர்வாகிகள் எஸ். பிரேம், ரவிச்சந்திரன், சுப்ரமணியன், தங்கவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாவட்ட துணைச் செயலர் ஜோ. மணிமாறன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் ஆர். ராஜவர்மன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT