பெரம்பலூர்

மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்: 225 பேர் பங்கேற்பு

DIN

பெரம்பலூர் மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உள்ளடங்கிய கல்வி திட்டம் சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தி. அருள்மொழிதேவி தொடக்கி வைத்தார். மாவட்ட மறுவாழ்வு அலுவலர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். முகாமில், காது, மூக்கு, தொண்டை நிபுணர், மனநலம் மருத்துவர், எலும்பு மூட்டு சிகிச்சை மருத்துவர், கண் மருத்துவர் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.
இதில், செயற்கைக்கால், வீல்சேர், மேசை, காது கேட்கும் கருவி, காலிபர் கருவிகள் தேவைப்படும் மாற்றுத் திறனாளிகளை தேர்வு செய்தனர். இதற்கான மாணவ, மாணவிகளின் உடல் தகுதி பரிசோதிக்கப்பட்டு குறைபாடு தன்மை, தேவைப்படும் பொருத்து கருவிகள் விவரங்கள் கண்கெடுக்கப்பட்டு, அடையாள அட்டை தேவைப்படுவோரின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டது. முகாமில், 225 பேர் பங்கேற்று பயன்பெற்றனர். இதில், உதவி உபகரணங்கள் வழங்க 86 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகலில் மே 5-இல் கடையடைப்பு

ராமநாதபுரம் அருகே வட மாநில கா்ப்பிணிப் பெண் கொலை

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

SCROLL FOR NEXT