பெரம்பலூர்

இரூர் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்

DIN

ஆலத்தூர் வட்டம், இரூர் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. 
 முகாமில், கால்நடை மருத்துவர் ஆர். குமரேசன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் ஆடு, மாடு, கோழி, நாய் உள்ளிட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும், கோமாரி நோய், தொற்று நோய்கள் பரவாமல் இருக்க புரோட்டீன் மருந்துகள் வழங்கினர்.
 இந்த முகாமில், இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள், கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் பணி அனுபவ திட்டத்தின் கீழ் பங்கேற்றனர்.  இதில், மாணவிகள் மருத்துவ முகாமின் நோக்கம், கால்நடைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  முகாமில், நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டன. இதில் இரூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த கால்நடை வளர்ப்போர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

SCROLL FOR NEXT