பள்ளி மாணவி விஷம் குடித்து சாவு
பெரம்பலூர் அருகே தந்தை திட்டியதால் பள்ளி மாணவி விஷம் குடிந்து புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
பெரம்பலூர்பள்ளி மாணவி விஷம் குடித்து சாவு
பெரம்பலூர் அருகே தந்தை திட்டியதால் பள்ளி மாணவி விஷம் குடிந்து புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
பெரம்பலூர் அருகே தந்தை திட்டியதால் பள்ளி மாணவி விஷம் குடிந்து புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
பெரம்பலூர் அருகேயுள்ள பொம்மனப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகள் கீர்த்தனா (17). இவர், செட்டிக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில், புதன்கிழமை மாலை சரியாகப் படிக்கவில்லை என கீர்த்தனாவை அவரது தந்தை திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கீர்த்தனா விஷம் குடித்தார். இதையறிந்த அவரது பெற்றோர் கீர்த்தானாவை மீட்டு, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், அங்கு அவர் உயிரிழந்தார். புகாரின்பேரில், பாடாலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.