பெரம்பலூர்

குடிநீர் கோரி ஆட்சியரிடம் மனு

DIN

பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட 5-ஆவது வார்டு மற்றும் வாலிகண்டபுரம் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி, சம்பந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் வே. சாந்தாவிடம், வாலிகண்டபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:வாலிகண்டபுரத்தில் முஸ்லிம் இனத்தவர்கள் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். கடந்த சில மாதங்களுக்கு முன் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில், தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக, 1 மாதத்துக்கு இரண்டு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்திடமும், சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களிடமும் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், குடிநீர் விநியோரம் இன்றி இஸ்லாமிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது ரமலான் பண்டிகைக்காக நோன்பு இருப்பதால் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. எனவே, இப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT