முகப்பு
பெரம்பலூர்

வாலிகண்டபுரம் பெருமாள்கோயிலில் திருட்டு

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்திலுள்ள பெருமாள் கோயிலில் உண்டியலை உடைத்து ரூ.25,000 திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

பெரம்பலூர்

வாலிகண்டபுரம் பெருமாள்கோயிலில் திருட்டு

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்திலுள்ள பெருமாள் கோயிலில் உண்டியலை உடைத்து ரூ.25,000 திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்திலுள்ள பெருமாள் கோயிலில் உண்டியலை உடைத்து ரூ.25,000 திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரத்தில் சுமார் 125 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில் உள்ளது. இக்கோயில்பூசாரி நரசிம்மன் செவ்வாய்க்கிழமை இரவு பூஜைகளை முடித்து, கோயில் வளாகத்தை பூட்டிச் சென்றிருந்தார்.
புதன்கிழமை காலை கோயிலை திறக்க பூசாரி நரசிம்மன் வந்த போது கோயில் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது, உண்டியலும் உடைக்கப்பட்டு, பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்த ரூ,.25,000 திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
திருட்டு குறித்து தகவலறிந்த மங்கலமேடு காவல்துறையினர் பிரசன்ன வெங்கசடாசலபதி கோயிலுக்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும்,  கைரேகை மற்றும் தடயங்களை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். கோயில் பூசாரி நரசிம்மன் அளித்த புகாரின் பேரில் மங்கலமேடு காவல்துறையினர் வழக்குப்பதிந்து,  உண்டியல் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.       

முழு கட்டுரையைப் படிக்க →