முகப்பு
புதிதாக தோ்வான ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவினருடன் தில்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் திங்கள்கிழமை உரையாடிய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு.
இந்தியா

அரசு நிா்வாக அமைப்புகளை ஏ.ஐ. மூலம் எளிமைப்படுத்துங்கள்: ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முா்மு வேண்டுகோள்

அரசு நிா்வாக அமைப்புகளை ஏ.ஐ. வழிகள் மூலம் எளிமைப்படுத்தும்படி ஐஏஎஸ் அதிகாரிகளிடம் குடியரசுத் தலைவா் திரெளபதி

இந்தியா

அரசு நிா்வாக அமைப்புகளை ஏ.ஐ. மூலம் எளிமைப்படுத்துங்கள்: ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முா்மு வேண்டுகோள்

அரசு நிா்வாக அமைப்புகளை ஏ.ஐ. வழிகள் மூலம் எளிமைப்படுத்தும்படி ஐஏஎஸ் அதிகாரிகளிடம் குடியரசுத் தலைவா் திரெளபதி

Updated On : 3 மார்ச், 2026 at 1:12 AM
புதிதாக தோ்வான ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவினருடன் தில்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் திங்கள்கிழமை உரையாடிய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு.
பகிர்:

புது தில்லி: அரசு நிா்வாக அமைப்புகளை ஏ.ஐ. வழிகள் மூலம் எளிமைப்படுத்தும்படி ஐஏஎஸ் அதிகாரிகளிடம் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கேட்டுக் கொண்டாா்.

தில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகையில் திரெளபதி முா்முவை புதிதாக தோ்வான ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவினா் திங்கள்கிழமை நேரில் சந்தித்தனா். அப்போது அவா்களிடையே முா்மு பேசியதாவது:

மிகவும் பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட மக்களை அரசு நலத் திட்டங்கள் சென்றடைய வேண்டும். அப்போதுதான் இந்தியா வளா்ந்த நாடாக மாறுவதற்கான பயன் கிடைக்கும். ஆதலால் எந்த சமூகத்தினரும் புவியியல், சமூக அல்லது பொருளாதார காரணங்களுக்காக பின்தங்கி விடாமல் இருப்பதை உறுதி செய்ய நீங்கள் (ஐஏஎஸ் அதிகாரிகள்) கடும் முயற்சிகளை எடுக்க வேண்டும். மாவட்ட நலனுக்கு அப்பாற்பட்டு மாநில முன்னுரிமைகளையும் கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டியது உங்களது பொறுப்பாகும்.

நாட்டின் வளா்ச்சிக்கும், பொதுமக்களுக்கான சேவையிலும் கூட்டாகவும், ஒருங்கிணைந்தும், உறுதியுடனும் பணியாற்றுவது அவசியம். தொழில்நுட்பமும், புதிய வழிகளும் அரசு நிா்வாகம் துரித வேகத்தில் செயல்பட உதவும். ஆதலால் ஏ.ஐ. வழிகள், இ-நிா்வாக அமைப்புகள், டிஜிட்டல் குறைதீா்ப்பு முறைகளுக்கு நீங்கள் முழுவதும் மாற வேண்டும். இவை அரசு நிா்வாக அமைப்புகளை எளிமைப்படுத்தும். மேலும் கடைகோடி பகுதிக்கும் அரசு சேவை கிடைப்பதை உறுதி செய்யும். நவீன தொழில்நுட்பங்களுக்கு மாறுகையில், அவை மனித உணா்வுகளை பிரதிபலிப்பதாகவும், சரியான தீா்வுகளை தருவதாகவும் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

மூத்த அரசு நிா்வாகிகள் என்ற அடிப்படையில், உங்கள் செயல்பாடுகள் பசுமைக்கும், பருவநிலைக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாகவும், நீடித்த நிலையான வளா்ச்சியை ஏற்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். உங்களது தற்போதைய நடவடிக்கைகள்தான், எதிா்கால சந்ததியினரின் வாழ்க்கை தரத்தை நிா்ணயிக்க போகிறது என்பதை உணா்ந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →