முகப்பு
பெரம்பலூர்

தூக்கிட்டு பெண் சாவு: கோட்டாட்சியர் விசாரணை

பெரம்பலூர் மாவட்டம்,  குன்னம் அருகேயுள்ள அசூர் கிராமத்தை சேர்ந்த வரதராஜன் மனைவி திவ்யா (23). இத்தம்பதிக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

பெரம்பலூர் மாவட்டம்,  குன்னம் அருகேயுள்ள அசூர் கிராமத்தை சேர்ந்த வரதராஜன் மனைவி திவ்யா (23). இத்தம்பதிக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி முகேஷ், சஞ்சய் என  2 மகன்கள் உள்ளனர். மேலும், திவ்யா 3 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்நிலையில், வரதராஜன் தந்தை முத்துசாமிக்கும், திவ்யாவுக்கும் இடையே புதன்கிழமை தகராறு ஏற்பட்டதாம்.
இதனால் மனமுடைந்த திவ்யா அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம்.
தகவலறிந்த குன்னம் போலீஸார் அங்குசென்று, அவரது சடலத்தை மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது தந்தை முருகேசன் அளித்த புகாரின்பேரில் குன்னம் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். மேலும், திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் வரதட்சிணை கொடுமையால் திவ்யா தற்கொலை செய்துகொண்டாரா என வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →