பெரம்பலூர்

காவிரி மேலாண்மை வாரியம் கோரி  மறியல்: மக்கள் சமூக நீதி பேரவையினர் 180 பேர் கைது

DIN

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, பெரம்பலூரில் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சமூக நீதி பேரவையைச் சேர்ந்த 180 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே மக்கள் சமூக நீதி பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில விவசாய அணி அமைப்பாளர் தியாகராஜன் தலைமை வகித்தார். காவிரி மீட்புக்கான போராட்டக்குழு பொறுப்பாளர் செல்வராணி முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் அருண் குமார், மாநில பொருளாளர் சுமதி, மாநில துணைத் தலைவர் துரைசாமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலை, மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், நியூட்ரினோ திட்டம் உள்ளிட்ட பொதுமக்களுக்கு எதிரான திட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி முழக்கமிட்டனர். 
தொடர்ந்து, மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய வளாகம் மற்றும் காமராஜர் வளைவு ஆகிய பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட 40 பெண்கள் உள்பட 180 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.         

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்த பதிரானா- முஸ்தஃபிசூர்!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

அயோத்தியா வந்தார் திரௌபதி முர்மு

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

127 ஆண்டுகால கோட்டை.. இரண்டாக உடையும் கோத்ரேஜ் குழுமம்

SCROLL FOR NEXT