பெரம்பலூர்

புதிய யுத்தி கண்டறிந்த பெரம்பலூர் விவசாயி

DIN

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் அமைந்துள்ள மானாவாரி வேளாண்மைக்கான மத்திய நிறுவனத்தில் (கிரிடா) வேளாண்மையில் புதிய யுத்திகளைக் கண்டறிந்தவர்களுக்கான கூட்டம் அண்மையில் நடைபெற்றது. 
இதில், பெரம்பலூர் மாவட்டம், இரூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜா, சின்ன வெங்காயத்தில் மதிப்பு கூட்டுதல் தொழில்நுட்பம், கே.புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மயில்வாகனன் வடிவமைத்த நகரும் மருந்து தெளிப்பான் குறித்தும் விளக்கம் அளித்தனர். விவசாயிகளின் நவீன கண்டுபிடிப்புகளுக்கு மத்திய நிறுவனம் சான்றிதழ், நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்துள்ளது. தொடர்ந்து, வேளாண் மையத்தில் திங்கள்கிழமை விவசாயிகளைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார் வேளாண் அறிவியல் மைய தலைவர் (பொ) ஜெ. கதிரவன்.  நிகழ்ச்சியின்போது, வேளாண் மைய தொழில்நுட்ப அலுவலர்கள் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT