பெரம்பலூர்

எஸ்.ஐ.யால் தாக்கப்பட்ட டாஸ்மாக் ஊழியர் மருத்துவமனையில் அனுமதி

DIN

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே காவல் நிலைய உதவி ஆய்வாளரால் தாக்கப்பட்ட அரசு மதுக் கடை ஊழியர், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூர் அருகேயுள்ள வண்ணாரம்பூண்டி கிராமத்தில் உள்ளஅரசு மதுக் கடையில் விற்பனையாளராக பணிபுரியும் மதியழகன், செவ்வாய்க்கிழமை இரவு விற்பனையை முடித்து கடையை சாத்தி விட்டு மது விற்பனை தொகையை கணக்குப் பார்த்து கொண்டிருந்தாராம். அப்போது, அங்கு சென்ற வி.களத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அசாருதீன், கதவை திறக்கக் கட்டாயப்படுத்தி உள்ளே சென்று மதியழகனை தகாத வார்த்தைகளால் திட்டி, பலமாக தாக்கினாராம். இதையடுத்து மதியழகன் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துமனையில் சிகிச்சை பெறுகிறார். வி .களத்தூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT