மருத்துவமனை வளாகத்தில் புகைப்பட கண்காட்சி
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி மற்றும் விடியோ படக்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி மற்றும் விடியோ படக்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கண்காட்சியில், முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு வழங்கிய நலத் திட்ட உதவிகளின் புகைப்படங்கள், பெரம்பலூர் மாவட்ட அரசு விழாக்களில் ஆட்சியர், பெரம்பலூர் மற்றும் சிதம்பரம் தொகுதி எம்.பிக்கள், பெரம்பலூர், குன்னம் தொகுதி எம்எல்ஏக்கள் ஆகியோர் பொதுமக்களுக்கு வழங்கிய நலத்திட்ட உதவிகள் குறித்த புகைப்படங்கள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. மேலும், தமிழக அரசின் திட்டங்கள் குறித்த விடியோ படக்காட்சியும் காட்டப்பட்டது. இவற்றை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து அறிந்து கொண்டனர்.