பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை பராமரிப்பு மையம் நடத்த அரசு சாரா நிறுவனங்களுக்கு அழைப்பு

DIN

பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை பராமரிப்பு மையங்கள் நடத்துவதற்கு அரசு சாரா நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:         மாவட்டத்தில் இளைஞர் நீதி சட்டம், விதிகள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச தர வசதிகளுடன் கூடிய குழந்தை பராமரிப்பு மையங்கள் நடத்துவதற்கு அரசு சாரா நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். 
ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மாவட்ட குழந்தை பாதுகாப்புத் திட்டம், குழந்தை நலக்குழு, இளைஞர் நீதிக் குழுமம் ஆகிய அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. 
18 வயதுக்குள்பட்ட குழந்தைகளில் நிறுவனம் சார்ந்த பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளின் மறுவாழ்வுக்காக திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச தர வசதிகளுடன் கூடிய குழந்தை பராமரிப்பு மையங்கள் நடத்தலாம். இதற்கான விண்ணப்பம், கூடுதல் விரங்களுக்கு மாவட்ட குழந்தை பாதுகாப்புத் திட்டம், எம்.எம். பிளாசா, திருச்சி மெயின் ரோடு, பெரம்பலூர் என்ற முகவரியில் அணுகி பயன்பெறலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT