பெரம்பலூர்

தென்னை விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நிறைவு

DIN


பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் தென்னை விவசாயிகளுக்கு நடைபெற்று வந்த பயிற்சி முகாம் சனிக்கிழமை நிறைவு பெற்றது.
தென்னை வளர்ச்சி வாரியத்தின் நிதியுதவியுடன் வாலிகண்டபுரம் வேளாண் அறிவியல் மையத்தில் கடந்த 3 ஆம் தேதி பயிற்சி தொடங்கியது.
தென்னைமரத்தின் சாகுபடிநுட்பங்கள், இயந்திரம் கொண்டு தென்னைமரம் ஏறுவதற்கு குறித்த பயிற்சியளிக்கப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 20 விவசாயிகள் முகாமில் பங்கேற்றனர்.சனிக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில், இயந்திரம் கொண்டு தென்னைமரம் ஏறும் போட்டி நடத்தப்பட்டது. இதில் விரைவாக மரம் ஏறிய 3 பேருக்கு அகரம்சீகூர் பாண்டியன் கிராம வங்கி மேலாளர் மணிகண்டன் பரிசுகளை வழங்கினார்.
பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானியும், தலைவருமான நேதாஜி மாரியப்பன் தென்னைமரத்தில் ஏறும் கருவியை வழங்கினார். வேளாண் அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட பலர் நிறைவு விழாவில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுகவை விமா்சிப்பவா்கள் கைது: வானதி சீனிவாசன் கண்டனம்

விவசாயிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம்: தலைவா்கள் வலியுறுத்தல்

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு

பிளஸ் 2 தோ்வு முடிவு: மாணவா்களுக்கு தலைவா்கள் வாழ்த்து

காஞ்சிபுரம் மாவட்டம் 92.28% தோ்ச்சி

SCROLL FOR NEXT