முகப்பு
பெரம்பலூர்

இருசக்கர வாகன மானியத்துக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

பணிபுரியும் மகளிருக்கு இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க திங்கள்கிழமை (பிப். 5) கடைசி நாளாகும் எனத் தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

பணிபுரியும் மகளிருக்கு இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க திங்கள்கிழமை (பிப். 5) கடைசி நாளாகும் எனத் தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. 
பெண்கள் தங்கள் பணியிடங்களுக்கு எளிதில் செல்லும் வகையில், அம்மா இருசக்கர வாகனம் வாங்க 50 சதவீதம் மானியம் அல்லது ரூ. 25 ஆயிரம் இதில், எது குறைவோ அந்தத்தொகையை பணிபுரியும் பெண்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் வழங்கபட உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் முதல்கட்டமாக 810 பெண்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது. 
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் திங்கள்கிழமைக்குள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகம், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை (அலுவலக வேலை நாள்களில்) விண்ணப்பங்களை பெற்று சமர்பிக்கலாம். விண்ணப்பத்துடன் 
பணிபுரிவதற்கான சான்றுகள், ஓட்டுநர் உரிமம் அல்லது எல்.எல்,ஆர், இருப்பிடச் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வயதுச் சான்று மற்றும் ஆதார் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் அல்லது பதிவு, விரைவு அஞ்சலில் அனுப்பி வைக்கலாம். 
இத் திட்டத்தின் கீழ் பயன்பெற 18 முதல் 40 வயது உள்ளவராகவும், விண்ணப்பிக்கும் போது இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் அல்லது எல்.எல்.ஆர் பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம். 
ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்துக்கு  மிகாமலும், மலைவாழ் பகுதிகளில் வசிக்கும் பெண்கள், பெண்களை குடும்பத் தலைவராக கொண்ட குடும்பங்களில் உள்ள பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற விதவைகள், ஊனமுற்ற பெண்கள், 35 வயதுக்கு மேல் உள்ள திருமணமாகாத பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் திருநங்கைகளுக்கு முன்னுரிமை. 
மேலும், அமைப்புசார், அமைப்புசாரா நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், சுயமாக சிறு தொழில் செய்யும் பெண்கள், அரசு நிதியுதவி பெறும் நிறுவனம், தனியார் நிறுவனம், அரசுத் திட்டங்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களில் ஒருங்கிணைந்த ஊதியம் மற்றும் தினக்கூலியில் பணிபுரியும் பெண்கள், வங்கி ஒருங்கிணைப்பாளர்கள், ஆஷா பணியாளர்கள் ஆகியோர் பயன் பெறலாம். 
விண்ணப்பதாரர்கள் அனைவரும் குறைந்தபட்டசம் 8 ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.