ஆவின் நிறுவன காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடம் இருந்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம்
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடம் இருந்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்) நிறுவனத்தில் காலியாக உள்ள 275 காலி பணியிடங்களுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணியிடங்களுக்கான கல்வித்தகுதிகள் பிளஸ் 2 தேர்ச்சி அல்லது ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், வயது வரம்பு, இன சுழற்சி, மொத்த காலியிடங்கள் மற்றும் தேர்வு செய்யும் முறை ஆகிய தகவல்கள் www.omcaavinsfarecruitment.com எனும் முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. மேற்காணும் விவரங்களை மனுதாரர்கள் மேற்கண்ட இணையத்தின் மூலமாக ஜூலை 16 ஆம் தேதிக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை பதிவுசெய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் (பொ) ஆ. அழகிரிசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.