முகப்பு
பெரம்பலூர்

7 ஆம் கட்டமாக அம்மா திட்ட முகாம் தொடக்கம்

பெரம்பலூர் மாவட்டத்தில் 7 ஆம் கட்டமாக ஜூலை 6 வெள்ளிக்கிழமை முதல் 7.6.2019 வரை அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளது. 

Updated On : 9 ஜூலை, 2018 at 8:22 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

பெரம்பலூர் மாவட்டத்தில் 7 ஆம் கட்டமாக ஜூலை 6 வெள்ளிக்கிழமை முதல் 7.6.2019 வரை அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளது. 
அம்மா திட்டத்தின் கீழ், வருவாய் வட்டாட்சியர் தலைமையில், வருவாய்த் துறை அலுவலர்கள் பொதுமக்களை தேடிச்சென்று அவர்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில், அம்மா திட்ட முகாம்கள் நடத்தப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் 7 ஆம் கட்டமாக அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. பெரம்பலூர் வட்டம் எசனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமை தொடக்கி வைத்து, பயனாளிகளுக்கு நத்தம் வீட்டுமனைப் பட்டா வழங்கிய மாவட்ட ஆட்சியர் (பொ) ஆ. அழகிரிசாமி, பொதுமக்கள் அனைவரும் வருவாய்த்துறை சார்ந்த தங்களது கோரிக்கைகளை முகாம் நடைபெறும் நாளில் கலந்து கொண்டு, தங்களுக்குத் தேவையான தீர்வுகளைப் பெற்று பயன்பெற வேண்டும் என்றார் அவர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.