பெரம்பலூர்

ரூ. 500 லஞ்சம் வாங்கிய  காவலருக்கு 3 ஆண்டு சிறை

DIN

பாஸ்போர்ட் விசாரணைக்காக ரூ. 500 லஞ்சம் வாங்கிய காவலருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து பெரம்பலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. 
பெரம்பலூர்- வடக்குமாதவி சாலையில் உள்ள மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் செல்லமுத்து மகன் ஜட்ஜ் (30). இவரது மனைவி ரேகா (26), பெரம்பலூர் தனியார் மருந்தியல் கல்லூரி விரிவுரையாளர். இந்நிலையில், ஜட்ஜ் தனது மனைவி ரேகாவுடன் வெளிநாடு சென்று பணிபுரியத் திட்டமிட்டிருந்தார். 
இதற்காக, திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் கடந்த 2010-இல் விண்ணப்பித்தார். 
இவரது விண்ணப்பம், பெரம்பலூர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக வந்தது. அப்போது பெரம்பலூர் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிந்த ஆறுமுகம், ஜட்ஜ் வீட்டுக்கு விசாரணைக்கு சென்று, ரூ. 500 அளித்தால் பாஸ்போர்ட்டுக்கு பரிந்துரைப்பதாகவும், இல்லையென்றால் காலதாமதாக பாஸ்போர்ட் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.  
ஆனால் பணம் தர விரும்பாத ஜட்ஜ், திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவில் புகார் அளித்தார். 
2010  ஜூலை 27 ஆம் தேதி மாலை, பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்திசிலை அருகே, ஜட்ஜிடம் இருந்து ரூ. 500 லஞ்சம் வாங்கிய ஆறுமுகத்தை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர், ஜாமினில் வெளியே வந்த ஆறுமுகம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 
பெரம்பலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி சஞ்சீவிபாஸ்கர், முதல்நிலை காவலர் ஆறுமுகத்துக்கு, 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

SCROLL FOR NEXT