பெரம்பலூர்

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மறியல்: பெரம்பலூர் 60, அரியலூரில் 70 பேரும் கைது

DIN

சென்னையில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் எதிரே வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 60 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு, முதல்வர் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, சென்னை தலைமைச் செயலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலையம் எதிரே மாவட்டச் செயலர் சி. ராஜேந்திரன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆலத்தூர் ஒன்றியச் செயலர் என். கிருஷ்ணமூர்த்தி, நகரச்செயலர் மா. பிரபாகரன் உள்ளிட்ட 60 பேரைப் பெரம்பலூர் போலீஸார் கைது செய்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 70 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர் பேருந்து நிலையம் முன்பு திமுக நகரச் முருகேசன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 40 பேரைப் போலீஸார் கைது செய்தனர். இதேபோல்,
செந்துறை பேருந்து நிலையம் முன்பு ஒன்றியச் செயலர் ஞானமூர்த்தி தலைமையில் மறியலில் ஈடுபட்ட திமுக-வினர் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆண்டிமடத்தில் 30 பேர் கைது: ஜயங்கொண்டம் அருகே ஆண்டிமடம் நான்கு சாலையில், திமுக ஒன்றிய செயலாளர்கள் தருமதுரை(தெ) ரெங்கமுருகன்(வ) ஆகியோர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ராமதாஸ், தனசேகரன், குணசேகரன், பாலு உள்ளிட்ட 30 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

SCROLL FOR NEXT