பெரம்பலூர்

உடல் நலக்குறைவால் உயிரிழந்த 2 காவலர்களுக்கு உயரதிகாரிகள் அஞ்சலி 

DIN

பெரம்பலூர் மாவட்டத்தில் உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை அடுத்தடுத்து இறந்த  2 போலீஸார் உடலுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பெரம்பலூர் மாவட்டம், மங்கலமேடு காவல் நிலைய தலைமைக் காவலர் சக்திவேல் முருகையன் (45). கடந்த ஒரு வாரமாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார். 
இதேபோல, பெரம்பலூர் மாவட்ட குற்ற ஆவணக் காப்பக தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த புஷ்பலதா (43) உடல் நலக்குறைவால் . கடந்த ஒரு மாதமாக பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில் இவரும் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்தார். பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் அவ்வையார் தெருவிலுள்ள அவரது இல்லத்தில் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. 
காவலர்களின் உடலுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் தலைமையில் காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பெரம்பலூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 காவலர்கள் உயிரிழந்ததால் காவல்துறையினர் சோகத்தில் ஆழந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT