முகப்பு
பெரம்பலூர்

இயற்கை விவசாய வழிமுறைகள் செயல்விளக்கப் பயிற்சி

பெரம்பலூர் அருகே இயற்கை விவசாயத்தில் ஆர்வமுடைய உழவர்களுக்கு, லாபகரமான இயற்கை விவசாய வழிமுறைகள் தொடர்பான

Updated On : 3 செப்டம்பர், 2018 at 8:45 AM
பகிர்:

பெரம்பலூர் அருகே இயற்கை விவசாயத்தில் ஆர்வமுடைய உழவர்களுக்கு, லாபகரமான இயற்கை விவசாய வழிமுறைகள் தொடர்பான நேரடி செயல்விளக்கப் பயிற்சி முகாம் சனி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
பெரம்பலூர் அருகே உப்போடையில் நடைபெற்ற முகாமில், நிலத்தை சீரமைத்தல், விதை தேர்வு செய்தல், நாற்று உருவாக்குதல், மேட்டுப் பாத்தி அமைத்தல், மூடாக்கு அமைத்தல், கீரை, காய்கறிகள் சாகுபடி,  மாடித் தோட்டம் அமைத்தல், இயற்கை இடுபொருள்கள் தயாரித்தல் மற்றும் பயன்படுத்துதல், இயற்கை பூச்சி விரட்டி முறைகள் குறித்து நேரடி களப்பயிற்சி மற்றும் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. 
மேலும், லாபகரமாக இயற்கை விவசாயம் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் பங்கேற்ற விவசாயிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட கைக்குத்தல் அரிசி, ஊரவைத்த கம்பு, கேழ்வரகு, பாணகம் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டது.  ஏற்பாடுகளை இயற்கை விவசாயிகள் கார்த்திகேயன், ஆறுமுகம் ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.