பெரம்பலூர்

ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட 323 விநாயகர் சிலைகள் காவிரி, கொள்ளிடத்தில் விசர்ஜனம்

DIN


பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட 323 சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி, கொள்ளிடம் ஆற்றில் சனிக்கிழமை விசர்ஜனம் செய்யப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் ஸ்ரீசெல்வ விநாயகர் கோயில், எடத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயில், ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோயில், தேரடி ஸ்ரீசஞ்சீவிராயர் கோயில், எம்ஜிஆர் நகர் ஸ்ரீபாலமுத்து மாரியம்மன் கோயில், எளம்பலூர் சாலை ஸ்ரீகற்பக விநாயகர் கோயில், மேரிபுரம் அருள்சக்தி விநாயகர் கோயில், வட்டாட்சியர் அலுவலக சாலை கச்சேரி விநாயகர் கோயில், வடக்குமாதவி சாலை சௌபாக்ய விநாயகர் கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. மேலும், பொதுமக்களும் தங்களது வீடுகளில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
தொடர்ந்து, பெரம்பலூரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள செல்வ விநாயகர் கோயிலுக்கு சனிக்கிழமை மாலை வாகனங்களில் கொண்டு வரப்பட்டது. அங்கு, சிறப்பு பூஜை
கள் நடத்தப்பட்டு காமராஜர் வளைவு, சங்குப்பேட்டை, வெங்கடேசபுரம், துறைமங்கலம் வழியாக திருச்சி காவிரி ஆற்றுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது.
அதேபோல, வேப்பந்தட்டை, பாடாலூர், குன்னம், ஆலத்தூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காவிரி நீரில் கரைக்கப்பட்டது. மாவட்டம் முழுவதிலும் 123 சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது.
ஊர்வலத்தையொட்டி மாவட்டம் முழுவதும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 200 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கொள்ளிடம் ஆறு, நீர் நிலைகளில் சனிக்கிழமை விசர்ஜனம் செய்யப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த வியாழக்கிழமை (செப்.13) மாவட்டத்தில் 233 இடங்களில் இந்து அமைப்புகள், தனியாரால் சிலைகள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. கடந்தாண்டைப் போலவே நிகழாண்டு புதிதாக சிலைகள் வைக்க காவல்துறையினர் அனுமதியளிக்கவில்லை. இதையடுத்து விசர்ஜனம் எனும் சிலைகள் கரைப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.இதற்காக, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இதில், திருமானூர், கீழப்பழுவூர், திருமழபாடி, தா.பழூர் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்ட சிலைகள் கொள்ளிடம் ஆற்றிலும், அரியலூரில் வைக்கப்பட்ட சிலைகள் மருதையாற்றிலும், செந்துறை, பொன்பரப்பி, மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்ட சிலைகள் அந்தந்த பகுதியிலுள்ள ஏரி,குளங்களில் விசர்ஜனம் செய்யப்பட்டது.மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிநவ்குமார் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். ஊர்வலத்தின் போது பதற்றமான பகுதிகள், மசூதிகள் உள்ள இடங்களில் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
ஜயங்கொண்டத்தில்...
ஜயங்கொண்டம், ஆண்டிமடம், குவாகம், கொடுக்கூர், தா.பழூர், சிலால், புதுசாவடி, ஆமக்கந்தொண்டி, குருவாலப்பர்கோவில், இலையூர், உடையார்பாளையம், சோழன்குறிச்சி, பரணம் உள்ளிட்ட கிராமங்களில் வைக்கப்பட்டிருந்த 78 விநாயகர் சிலைகள் ஜயங்கொண்டம் வேலாயுத நகருக்கு கொண்டு வரபபட்டது. அங்கிருந்து பேருந்து நிலைய சாலை, கடைவீதி, சின்னவளையம் குறுக்குசாலை வழியாக அணைக்கரையில் கொள்ளிடம் ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

முத்தையா இயக்கத்தில் விஷால்?

ஐபிஎல் தொடரிலிருந்து நாடு திரும்பும் இங்கிலாந்து வீரர்கள்; எந்த அணிக்கு பாதிப்பு?

குருப்பெயர்ச்சி ஒருவருக்கு பலமா? பலவீனமா?

SCROLL FOR NEXT