பெரம்பலூர்

முயல் வேட்டைக்கு அனுமதி மறுப்பு: 20-க்கும் மேற்பட்டோர் கைது

DIN

பெரம்பலூர் அருகே முயல் வேட்டைக்கு போலீஸார் அனுமதி மறுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20-க்கும் மேற்பட்டோரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். 
பெரம்பலூர் அருகேயுள்ள லாடபுரம் கிராமத்தில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் முயல் வேட்டை திருவிழா நடைபெறும். இந்நிலையில், இந்த கிராமத்தில் உள்ள இரு பிரிவினருக்கும் இடையே அண்மையில் ஏற்பட்ட தகராறில் சிலர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். 
இதனிடையே இரு பிரிவினரும் முயல்வேட்டை திருவிழா நடத்த பெரம்பலூர் போலீஸாரிடம் அனுமதி கேட்டபோது சாதி கலவரம் ஏற்படும் சூழல் உள்ளதால் போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர். இருப்பினும், கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒரு பிரிவினர் முயல்வேட்டை திருவிழாவுக்கு சென்றதாக தகவல் கிடைத்ததால், ஆத்திரமடைந்த மற்றொரு பிரிவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனிடையே, மற்றொரு பிரிவினரும் போலீஸாரின் உத்தரவை மீறி ஞாயிற்றுக்கிழமை முயல் வேட்டை திருவிழா நடத்த முடிவெடுத்ததாகத் தெரிகிறது. இதையறிந்த 100-க்கும் மேற்பட்ட போலீஸார் அந்த கிராமத்துக்குச் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், முன்னெச்சரிக்கையாக 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்த போலீஸார் மாலையில் அவர்களை விடுவித்தனர். இதனால், அந்த கிராமத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT