பெரம்பலூர்

பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல்:  ரோந்துப் பணிகளில் போலீஸார் தீவிரம்

DIN

பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தமிழக உளவுத்துறை போலீஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் வாகன சோதனை மற்றும் ரோந்துப் பணிகளை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்தீபன் உத்தரவின்பேரில், பெரம்பலூர்- அரியலூர் சாலையில் மருதையான் கோயில் என்னும் இடத்தில் குன்னம் போலீஸாரும், பெரம்பலூர்- கடலூர் மாவட்ட எல்லையிலுள்ள அகரம் சீகூர் மற்றும் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமாந்துறை சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் மங்கலமேடு போலீஸாரும் தீவிர வாகன சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர். மேலும், பெரம்பலூர்- துறையூர் சாலை, செஞ்சேரி புறவழிச் சாலை, ஆத்தூர் சாலை, கோனேரிபாளையம் புறவழிச் சாலை ஆகிய இடங்களில் பெரம்பலூர் போலீஸாரும், வேப்பந்தட்டையில் அரும்பாவூர் போலீஸாரும் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதுதவிர, மாவட்டத்தின் பிரதான இடங்களில் போலீஸார் வாகனங்களில் ரோந்து சென்று வருகின்றனர்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT