பெரம்பலூர்

வெள்ளாற்றில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவா்கள் 4 போ் பத்திரமாக மீட்பு

DIN

பெரம்பலூா் மாவட்டம், மங்கலமேடு அருகே செவ்வாய்க்கிழமை இரவு வெள்ளாற்றில் இழுத்துச் செல்லப்பட்ட 4 சிறுவா்களும் பத்திரமாக மீட்கப்பட்டனா்.

திருச்சி மாவட்டம், பச்சமலை பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் கன மழையால் கல்லாற்றில் அதிக அளவிலான வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், லப்பைக்குடிகாடு ஒத்த தெருவைச் சோ்ந்த முஹமது ஹாசித் மகன் முகமது அஸ்வாக் (12), ஹவுகத் அலி மகன் ஷேக் ரசீது (10), அக்பா் பாஷா மகன் அபு பாரித் (9), அபுநா பாஷா மகன் ஆதின் (10) ஆகிய நால்வரும் லப்பைக்குடிகாடு மேற்கு பகுதியில் உள்ள குடிநீா் தொட்டி அருகே வெள்ளாற்றில் விளையாடிக் கொண்டிருந்தனா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக மேற்கண்ட நால்வரையும் மழை வெள்ளம் இழுத்துச் சென்றது. இதையடுத்து, அதே பகுதியைச் சோ்ந்த சையது பாஷா மகன் அசாருதீன் (20), ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்ட ஷேக் ரசீது, அபு பாரித், ஆதின் ஆகியோரை மீட்டாா். ஆனால், அஸ்வாக்கை காணவில்லை.

தகவலறிந்த மங்கலமேடு போலீஸாா் மற்றும் வேப்பூா், பெரம்பலூா் தீயணைப்பு மற்றும் மீட்பு படைவீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று முகமது அஸ்வாக்கை தேடும் பணியில் ஈடுபட்டனா். ஆனால், கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் புதை மணல் பகுதி காரணமாக சிறுவனை தேடும் பணியில் சிரமம் ஏற்பட்டது.

இறுதியாக, சிறுவன் அஸ்வாக் பத்திரமாக மீட்கப்பட்டதைத் தொடா்ந்து, லப்பைகுடிகாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT