பெரம்பலூர்

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

DIN

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட,  மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். 
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட  மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.  இதற்காக விண்ணப்பிப்போர் அதற்கான படிவங்களை தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று, அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் தேதிக்குள் பூர்த்தி செய்து, உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும்
மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம். 
w‌w‌w.‌t‌n.‌g‌o‌v.‌i‌n/​b​c‌m​b​c‌d‌e‌p‌t 
 என்ற அரசு இணையதளம் மூலமாக இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களை பெறலாம்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT