பெரம்பலூர்

மடிக்கணினி கேட்டு முன்னாள் பள்ளி மாணவர்கள் மறியல்

DIN

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2017- 18 மற்றும் 2018- 19 ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 படித்து முடித்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, இதுவரை தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. 
இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையி ட்டும் பலனில்லை. இதனால், அதிருப்தியடைந்த எசனை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற சுமார் 100-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவிகள் மடிக்கணினி வழங்கக் கோரி எசனை காட்டு மாரியம்மன் கோயில் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  
தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் பேச்சுவார்த்தையில் நடத்தியதில், மாணவ, மாணவிகள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதேபோல, வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்களும் மறியலில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT